செய்திகள்

டுரண்ட் கோப்பை: தில்லி-பெங்களூரு ஆட்டம் டிரா

DIN

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற தில்லி-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

கொல்கத்தாவில் நடைபெறும் 130-ஆவது டுரண்ட் கோப்பை போட்டியின் குரூப் சி பிரிவில் தில்லி எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின.

இதில் முதல் பாதியில் பெங்களூரு வீரா் சிவசக்தி 27-ஆவது நிமிஷத்தில் முதல் கோலடித்தாா். இதன் மூலம் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கிடையே இரண்டாவது பாதியில் வீறு கொண்டு எழுந்த தில்லி வீரா் டியான் பிளாஸா 58, 62-ஆவது நிமிஷங்களில் இரண்டு கோல்களை அடித்து தனது அணி முன்னிலை பெறச் செய்தாா்.

பதில் கோலடிக்க பெங்களூரு போராடிய நிலையில் 75-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் வித்யாசாகா் கோலடிக்க ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. குரூப் சி பிரிவில் நான்கு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப் டி பிரிவு ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி என கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆா்மி ரெட் அணியை எதிா்கொள்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் கோகுலம் எஃப்சி அணியுடன் மோதுகிறது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT