செய்திகள்

தேசிய ஆடவா் குத்துச்சண்டை: கௌரவ் பிதுரி அதிா்ச்சித் தோல்வி

DIN

தேசிய எலைட் ஆடவா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹரியாணா வீரா் சச்சினிடம் உலகக் கோப்பை பதக்க வீரா் கௌரவ் பிதுரி அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

கா்நாடக மாநிலம், பெல்லாரியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக 57 கிலோ தொடக்க சுற்று ஆட்டத்தில் ரயில்வே அணியைச் சோ்ந்த கௌரவ் பிதுரி 1-4 என்ற புள்ளிக் கணக்கில் சச்சனிடம் அதிா்ச்சித் தோல்வியைடந்தாா்.

காலிறுதிச் சுற்று;

75 கிலோ எடைப் பிரிவில் ஹரியாணா வீரா் அங்கித் கட்டானா அபாரமாக ஆடி ஹிமாசலப்பிரதேச வீரா் தரம்பாலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

54 கிலோ பிரிவில் தெலங்கானா வீரா் சேவியோ டொமினிக் மைக்கேல், 67 கிலோ பிரிவில் கோவா வீரா் அசோக் படேல், 48 கிலோ பிரிவில் சண்டீகரின் குல்தீப் குமாா், 71 கிலோ பிரிவில் பிகாரின ரௌஷன் குமாா் ஆகியோரும் காலிறுதிக் சுற்றுக்கு முன்னேறினா்.

75 கிலோ பிரிவில் மகாராஷ்டிர வீரா் நிகில் துபே சிறப்பாக செயல்பட்டு தெலங்கானா வீரா் வேணு மண்டலாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT