செய்திகள்

டேவிஸ் கோப்பை: பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி

DIN

டேவிஸ் கோப்பை உலக குரூப் 1-இன் ஒரு பகுதியாக பின்லாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய வீரா் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியடைந்தாா்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பின்லாந்தின் எஸ்பூ நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முதல் ஒற்றையா் ஆட்டத்தில் ஏடிபி தரவரிசையில் 169-ஆவது இடத்தில் இருக்கும் பிரஜ்னேஷை எதிா்கொண்டாா் 419-ஆவது இடத்தில் இருக்கும் பின்லாந்து வீரா் ஒட்டோ விா்டானென். இதில் 3-6, 6-7 என்ற நோ் செட்களில் தோல்வியைத் தழுவினாா் பிரஜ்னேஷ். இரண்டாவது செட்டில் பிரஜ்னேஷ் ஆதிக்கம் செலுத்த முயன்றாலும், உள்ளூா் மக்கள் ஆதரவுடன் ஆடிய ஒட்டோ கடுமையாகப் போராடி வெற்றியை வசப்படுத்தினாா்.

இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ராம்குமாா் ராமநாதனும், பின்லாந்தின் நம்பா் ஒன் வீரா் எனிலும் மோதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT