செய்திகள்

2-வது முறையாக இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா அனில் கும்ப்ளே?

18th Sep 2021 12:14 PM

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. 

2016-17-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார் அனில் கும்ப்ளே. எனினும் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பதவி விலகினார். இதன்பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ரவி சாஸ்திரி விலகவுள்ளதாக அறியப்படுகிறது. இதனால் அடுத்த பயிற்சியாளரைத் தேடும் வேலையைத் தொடங்கியுள்ளது பிசிசிஐ.

அனில் கும்ப்ளேவை இந்திய அணியின் பயிற்சியாளராக்க பிசிசிஐ மீண்டும் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர விவிஎஸ் லட்சுமணனையும் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதால் புதிய சூழல் அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பணியாற்ற பொருத்தமாக இருக்கும் என பிசிசிஐ எண்ணுவதால் இத்தகைய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பயிற்சியாளர் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Tags : BCCI Anil Kumble
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT