செய்திகள்

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

16th Sep 2021 06:08 PM

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார்.

பிரபல பேட்ஸ்மேனான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இதுபற்றிய அறிக்கையில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த 8, 9 வருடங்களாக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறேன். 5, 6 வருடங்களாக கேப்டனாக உள்ளேன். இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். 

Tags : virat kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT