செய்திகள்

டி20 தொடர்: வங்கதேசம் சாம்பியன்: கடைசி ஆட்டத்தில் நியூஸி. வெற்றி

11th Sep 2021 03:36 AM

ADVERTISEMENT

 

டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் தொடர், 3-2 என்ற கணக்கில் வங்கதேசத்தின் வசமானது. 

டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களே அடித்தது. நியூஸிலாந்தின் டாம் லதாம் "ஆட்டநாயகன்', வங்கதேசத்தின் நசும் அகமது "தொடர்நாயகன்' விருது வென்றனர். 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லதாம் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பெளலிங்கில் சோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார். 

ADVERTISEMENT

பின்னர் ஆடிய வங்கதேசத்தில் அதிகபட்சமாக அஃபிஃப் ஹுசைன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து அணியில் அஜாஸ் படேல், ஸ்காட் குகெலெய்ஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT