செய்திகள்

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்: புதிய சாதனை படைப்பாரா?

DIN

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பிரபல வீரர் ஜோகோவிச். இதையடுத்து புதிய சாதனையை நிகழ்த்துவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள், ஒலிம்பிக் தங்கம் என்கிற ஜோகோவிச்சின் கோல்டன் ஸ்லாம் கனவை டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தகர்த்தார் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். இந்நிலையில் யு.எஸ். ஓபன் அரையிறுதியில் ஸ்வெரேவை மீண்டும் எதிர்கொண்டார் ஜோகோவிச். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்  4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிச்.

இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று பட்டங்களையும் ஜோகோவிச் வென்றுள்ளார். தற்போது யு.எஸ். ஓபன் பட்டத்தையும் வென்றால் ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்கிற பெருமையை அடைவார். இதற்கு முன்பு ஆடவர் டென்னிஸில் 1969-ல் ராட் லேவர் ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றார். மேலும் ஆடவா் ஒற்றையரில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்கிற சாதனையையும் ஜோகோவிச் நிகழ்த்த வாய்ப்புள்ளது. 

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனியல் மெட்விடேவை எதிர்கொள்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT