செய்திகள்

4-வது டி20: 93 ரன்களுக்கு நியூசிலாந்தைச் சுருட்டிய வங்கதேச அணி

8th Sep 2021 06:05 PM

ADVERTISEMENT

 

வங்கதேச அணிக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது நியூசிலாந்து அணி.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. இதுவரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ள டி20 தொடரில் வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது டி20 ஆட்டம் டாக்காவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பேட்டிங்குக்குக் கடினமான ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வில் யங் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

ADVERTISEMENT

Tags : New Zealand Bangladesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT