செய்திகள்

கடைசி நாளில் அசத்திய இந்திய அணி: ஓவல் டெஸ்ட் ஹைலைட்ஸ் விடியோ

7th Sep 2021 11:54 AM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் 57, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 81 ரன்களும் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தார்கள். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 127, புஜாரா 61, ஷர்துல் தாக்குர் 60, ரிஷப் பந்த் 50 ரன்கள் எடுத்தார்கள். வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

4-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி கடைசி நாளில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. ரோஹித் சர்மா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். கடைசி நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ:

Tags : England India
ADVERTISEMENT
ADVERTISEMENT