செய்திகள்

மீண்டும் அரைசதத்தில் ஆட்டமிழந்த கோலி: திணறும் இந்தியா!

2nd Sep 2021 08:15 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில் கிறிஸ் வோக்ஸின் சிறப்பான பந்தால் ரோஹித் சர்மா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுலும் 17 ரன்களுக்கு ஆலி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடந்த டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா இம்முறை 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால், இந்த மாற்றம் அணிக்குப் பலனளிக்கவில்லை. அவர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்ககுறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை

இதனால், இந்திய அணி 69 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ரஹானேவும் தொடக்கத்தில் சற்று தடுமாற கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து விளையாடி வந்த கோலி 85-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

649 நாள்களாகியும் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் சதமடிக்காத கோலி, இம்முறை அரைசதத்தை சதமாக மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இம்முறையும் அரைசதம் அடித்த கோலி ராபின்சன் பந்தில் சரியாக 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து துணை கேப்டன் ரஹானேவும் 14 ரன்களுக்கு கிரெய்க் ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.

தேநீர் இடைவேளையில் இந்திய அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறல் நிலையில் உள்ளது.

Tags : Kohli
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT