செய்திகள்

ஸ்காட்லாந்து - 109/8

27th Oct 2021 10:45 PM

ADVERTISEMENT

 

அபுதாபி: உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிராக ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் அடித்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பௌலிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த ஸ்காட்லாந்தில் தொடக்க வீரா் ஜாா்ஜ் மன்சே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாா். அந்த அணிக்கான அடுத்த அதிா்ச்சியாக, தொடா்ந்து வந்த கேலம் மெக்லியாட், கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆகியோரும் முதல் ஓவரிலேயே வீழ்ந்தனா். மூவரையுமே டக் அவுட் செய்தாா் நமீபிய பௌலா் ரூபன் டிரெம்பிள்மான்.

பின்னா் ஆடியோரில் கிரெய்க் வாலெஸ் 4 ரன்கள் அடிக்க, தொடக்க வீரா்களில் ஒருவராக வந்து சற்று நிலைத்த மேத்தியு கிராஸ் 1 பவுண்டரியுடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 6-ஆவது வீரராக களம் கண்டு விக்கெட் சரிவை தடுத்த மைக்கேல் லீஸ்க் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் சோ்த்து அவுட்டானாா். மாா்க் வாட் 3 ரன்கள் எடுக்க, கிரிஸ் கிரீவ்ஸ் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக வெளியேறினாா்.

ADVERTISEMENT

ஓவா்கள் முடிவில் ஜோஷ் டேவி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, நமீபியா பௌலிங்கில் ரூபன் 3, ஜேன் ஃப்ரீலிங்க் 2, ஜேஜே ஸ்மித், டேவிட் வீஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT