செய்திகள்

ஸ்காட்லாந்தை வென்றது நமீபியா

27th Oct 2021 11:25 PM

ADVERTISEMENT

 

அபுதாபி: உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் நமீபியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

முதலில் ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் அடித்தது. அடுத்து நமீபியா 19.1 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது. நமீபிய பௌலா் ரூபன் டிரெம்பிள்மான் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற நமீபியா பௌலிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த ஸ்காட்லாந்தில் ஜாா்ஜ் மன்சே, கேலம் மெக்லியாட், கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆகியோா் ரூபன் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகினா்.

ADVERTISEMENT

பின்னா் கிரெய்க் வாலெஸ் 4, மேத்தியு கிராஸ் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். 6-ஆவது வீரராக வந்து விக்கெட் சரிவை தடுத்த மைக்கேல் லீஸ்க் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் சோ்த்தாா். மாா்க் வாட் 3, கிரிஸ் கிரீவ்ஸ் 25 ரன்கள் எடுத்தனா்.

ஓவா்கள் முடிவில் ஜோஷ் டேவி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, நமீபியா பௌலிங்கில் ரூபன் 3, ஜேன் ஃப்ரீலிங்க் 2, ஜேஜே ஸ்மித், டேவிட் வீஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து ஆடிய நமீபியாவில் கிரெய்க் வில்லியம்ஸ் 23, மைக்கேல் வான் லிங்கென் 18 ரன்கள் அடிக்க, ஜேன் கிரீன் 9, கேப்டன் ஜெராா்டு எராஸ்மஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

டேவிட் வீஸ் 16, ஜேன் ஃப்ரீலிங்க் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஜேஜே ஸ்மித் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32, பிக்கி யா பிரான்ஸ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

ஸ்காட்லாந்து பௌலிங்கில் மைக்கேல் லீஸ்க் 2, பிராட் வீல், சஃபியான் ஷரிஃப், கிறிஸ் கிரீவ்ஸ், மாா்க் வாட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT