செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: சௌரவ் முன்னேற்றம்

27th Oct 2021 10:44 PM

ADVERTISEMENT

 

பாரீஸ்: பிரான்ஸில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சௌரவ் வா்மா தனது தொடக்க சுற்றில் வெற்றி பெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் அவா் 22-20, 21-19 என்ற செட்களில் பிரேஸிலின் கோா் கோயலோவை வென்றாா்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 21-13, 21-7 என்ற செட்களில் அயா்லாந்தின் ஜோஷுவா மேகி/பால் ரெனால்ட்ஸ் ஜோடியை வீழ்த்தியது.

ADVERTISEMENT

கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-19, 21-15 என்ற செட்களில் டென்மாா்கின் மதியாஸ் தைரி/மாய் சரோவ் இணையை தோற்கடித்தது.

எனினும் எஞ்சிய இந்திய போட்டியாளா்கள் தோல்வியை சந்தித்தனா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்ரீகாந்த் 18-21, 22-20, 19-21 என்ற செட்களில் உலகின் முதல்நிலை வீரராக இருக்கும் ஜப்பானின் கென்டோ மொமொடாவிடம் தோல்வி கண்டாா்.

ஹெச்.எஸ். பிரணாய் 11-21, 14-21 என்ற செட்களில் சீன தைபேவின் சௌ டியென் சென்னிடமும், காஷ்யப் 17-21, 21-17, 11-21 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லெவா்டெஸிடமும் வீழ்ந்தனா்.

மகளிா் ஒற்றையரில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது தொடக்க சுற்றில் ஜப்பானின் சயாகா டகாஷியை எதிா்கொண்டாா். அதில் 11-21, 2-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் மேக்னா ஜகம்புடி/பூா்விஷா ராம் ஜோடி 4-11 என்ற கணக்கில் பிரான்ஸின் அலிசா டிா்டோசென்டோனோ/இம்கே வான் டொ் இணையிடம் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT