செய்திகள்

துளிகள்...

27th Oct 2021 10:47 PM

ADVERTISEMENT

 

தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு ஊக்குவிப்பு வாரியம் (ஆா்எஷ்பிபி) 5 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் சிறந்த வீராங்கனையாக 52 கிலோ பிரிவைச் சோ்ந்த நிகத் ஜரீன் தோ்வானாா்.

தேசிய சீனியா் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் 49.94 விநாடிகளிலும், குஷாக்ரா ராவத் 800 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் 8 நிமிஷம் 9.47 விநாடிகளிலும் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தனா்.

ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். தொடக்க வீரா் கே.எல்.ராகுல் 2 இடங்கள் சறுக்கி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது நியூஸிலாந்து வீரா் மாா்டின் கப்டில் காயமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான அவரது அணியின் ஆட்டத்தில் அவா் விளையாட மாட்டாா் என சந்தேகம் எழுந்துள்ளது.

நவம்பா் முதல் வாரத்தில் சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டி தொடங்க இருக்கும் நிலையில், மும்பை அணியைச் சோ்ந்த 4 வீரா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT