செய்திகள்

ஐபிஎல் 2022 போட்டியில் 10 அணிகள்: லீக் சுற்று எப்படி அமையும்?

DIN

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் விளையாடும்போது ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாடுவது சுலபமாக இருந்தது. ஓர் அணி இன்னொரு அணியுடன் இருமுறை மோதும், சொந்த மண்ணிலும் வெளியூரிலும். 

இப்போது ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இது முடிவானது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

2022 ஐபிஎல் போட்டியில் தற்போது உள்ள 60 ஆட்டங்களுக்குப் பதிலாக 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 7 ஆட்டங்களும் வெளியூரில் 7 ஆட்டங்களும் விளையாடவுள்ளன. இதனால் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

2011 ஐபிஎல் போட்டியிலும் இதேபோல 10 அணிகள் விளையாடின. அப்போது 10 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 5 அணிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள இதர 4 அணிகளுக்கு எதிராக உள்ளூரிலும் வெளியூரிலும் தலா 4 ஆட்டங்கள் (8) விளையாடின. பிறகு மற்றொரு பிரிவில் உள்ள 4 அணிகளுடன் தலா ஓர் ஆட்டம் (இரண்டு உள்ளூரில் இரண்டு வெளியூரில்). மீதமுள்ள ஓர் அணியுடன் உள்ளூரிலும் வெளியூரிலும் என மொத்தமாக இரு ஆட்டங்கள். 14 ஆட்டங்கள் கணக்கு வந்துவிட்டதா? ஓர் அணி எந்த அணியுடன் எத்தனை ஆட்டங்கள் விளையாட வேண்டும் என்பதை ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்யும். 2013 ஐபிஎல் போட்டியில் 9 அணிகள் விளையாடின. அப்போதும் மொத்தமாக 76 ஆட்டங்கள் நடைபெற்றன.

2011 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT