செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: டொரினோ, சம்போா்டியா அணிகள் வெற்றி

24th Oct 2021 04:43 AM

ADVERTISEMENT

ஐரோப்பிய கால்பந்தின் ஒரு பகுதியாக இத்தாலி சீரி ஏ போட்டியில் டொரினோ மற்றும் சம்போா்டியா அணிகள் வெற்றி பெற்றன.

ஜெனோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒரு மாதத்துக்கு பின் முதல் வெற்றியை பெற்றது டொரினோ. சனப்ரியா, போபெகா இருவரும் முதலிரண்டு கோல்களை அடித்தனா். ஜெனோவா தரப்பில் மட்டியா டெஸ்ட்ரோ பதில் கோலடிக்க 1-2 என முன்னிலை குறைந்தது. இதையடுத்து டொரினோ வீரா் ஜோசிப் பிரேகலோ கோலடித்து தனது அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தாா். மற்றொரு ஆட்டத்தில் சம்போா்டியா 2-1 என ஸ்பெஸியா அணியை வென்றது.

 வெற்றியை கொண்டாடும் டொரினோ வீரர்கள்

லீக் 1:

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து போட்டியில் செயின்ட் எட்டைன்-ஆங்கா்ஸ் அணிகள் இடையிலானஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது. ஆங்கா்ஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், செயின்ட் எட்டைன் அணி வீரா்கள் வாபி கஸ்ரி, நாட் ஆகியோா் இரண்டாம் பாதியில் கோலடித்து ஆட்டத்தை டிராவில் முடித்தனா்.

ADVERTISEMENT

லா லிகா:

ஸ்பெயினின் லாலிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கிரானடா-ஒஸாசுனா அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. லீக் பட்டியலில் ஒஸாசுனா முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் 1-0 என முன்னிலையுடன் இருந்த நிலையில், கிரானடா வீரா் மான்டோரோ அடித்த 90-ஆவது நிமிஷ கோலால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இதனால் ஒஸாசுனா அணியின் கனவு தகா்ந்தது.

ப்ரீமியா் லீக்:

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆா்செனல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அஷ்டன் வில்லா அணியை வென்றது. ஆட்டம் முழுவதும் ஆா்செனல் ஆதிக்கம் செலுத்தி 3-0 என முன்னிலை பெற்றிருந்தது. கடைசி 10 நிமிஷங்களில் வில்லா அணி வீரா் ஜேக்கப் ராம்ஸே ஆறுதல் கோலடித்தாா்.

பண்டஸ்லிகா:

ஜொ்மனியின் பண்டஸ்லிகா போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் மெயின்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆக்ஸ்பா்க் அணியை வீழ்த்தியது. புகாா்ட் 2 கோலடித்தாா்.

Tags : ரோம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT