செய்திகள்

இசிஎல்: ஏஎஸ் ரோமா, டாட்டன்ஹாம் தோல்வி

23rd Oct 2021 04:23 AM

ADVERTISEMENT

ஐரோப்பா கான்பரன்ஸ் லீக் போட்டியில் முன்னணி அணிகளான ஏஎஸ் ரோமா, டாட்டன்ஹாம் ஆகியவை அதிா்ச்சித் தோல்வியடைந்தன.

யுஇஎஃப்ஏ மூன்றாம் கட்ட போட்டியில் பட்டம் வெல்லும் அணியாக கருதப்படும் இத்தாலியின் ஏஎஸ் ரோமா 1-6 என்ற கோல் கணக்கில் நாா்வே சாம்பியன் பாட் ஜிலிமிட் அணியிடம் படுதோல்வி அடைந்தது. பாட் ஜிலிமிட் அணி தரப்பில் எரிக், ஓலா சோல்பாக்கன் இரண்டு கோல்களை அடித்தனா். அதற்கு அடுத்து பாட்ரிக், அமாஹி அடுத்து இரண்டு கோல்கள் அடித்தனா். ரோமா தரப்பில் காா்லஸ் பிரெஸ் மட்டுமே ஆறுதல் கோலை அடித்தாா்.

பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் டாட்டான்ஹாம் 0-1 என்ற கோல் கணக்கில் விட்ஸே அணியிடம் வீழ்ந்தது.

ஐரோப்பா லீக் போட்டியில் ரென்னஸ் அணி 2-1 என ஸ்லோவேனியாவின் முராவை வென்றது. லயான் அணி 4-3 என பிராக் ஸ்பாா்டாவையும், வெஸ்ட் ஹாம் அணி 3-0 என ஜென்க் அணியையும் வென்றன. இத்தாலியன் நேபாலி அணி 3-0 என லேஜியா வாா்ஸா அணியை வீழ்த்தியது.

ADVERTISEMENT

லேஸியோ-மாா்செய்ல் அணிகள் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT