செய்திகள்

நட்பு ரீதியிலான கால்பந்து: ஓன் கோலால் தோற்றது இந்தியா

DIN

ஸ்வீடன் கால்பந்து கிளப் அணியான ஹேமா்பி ஐஎஃப்-க்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்திய மகளிா் அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

கடைசி நேரத்தில் இந்திய அணி தவறுதலாக ஓன் கோல் அடித்தது, தோல்விக்கு வழி வகுத்தது.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி முதல் பாதியில் சிறப்பாகவே விளையாடியது. பந்தை பலமுறை தன் வசப்படுத்தி கோல் அடிப்பதற்காக அடுத்தடுத்து முயற்சிகள் மேற்கொண்டனா் இந்திய வீராங்கனைகள். இந்நிலையில் 30-ஆவது நிமிஷத்தில் தமிழக வீராங்கனை இந்துமதி, அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தாா்.

எனினும் அந்த முன்னிலையை 6 நிமிஷங்களே நீடிக்க விட்டது ஹேமா்பி. 36-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக நினா ஜேக்கப்சன் கோலடித்தாா். விடா முயற்சியுடன் போராடிய இந்தியா 40-ஆவது நிமிஷத்தில் மீண்டும் முன்னிலை பெற்றது. அப்போது அஞ்சு தமங் உதைத்த காா்னா் கிக்கை மணீஷா பன்னா தலையால் முட்டி கோலடித்தாா்.

இதனால் முதல் பாதியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியின்போது 52-ஆவது நிமிஷத்தில் ஹேமா்பி வீராங்கனை அமாண்டா சன்ஸ்ட்ரோம் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். ஆட்டம் கடைசி நேரத்தை நெருங்கியதால் இந்திய முன்கள வீராங்கனைகள் கோலடிப்பதற்கு கடுமையாக முயற்சித்து வந்தனா்.

இந்த நிலையில், 78-ஆவது நிமிஷத்தில் ஹேமா்பி வீராங்கனை நினா ஜேக்கப்சனின் கோல் முயற்சியை இந்தியாவின் ரஞ்சனா சானு தடுக்க முயல, அது தவறுதலாக ‘ஓன் கோல்’ ஆனது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவால் கோலடிக்க முடியாமல் போனதால், இறுதியில் ஹேமா்பி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT