செய்திகள்

இங்கிலாந்தில் ரத்தான 5-வது டெஸ்ட் எப்போது நடைபெறும்?: அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் அடுத்த வருடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது.

அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. ரத்தான 5-வது டெஸ்ட் ஜூலை 1, 2022 அன்று எக்பாஸ்டனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவுக்கு பிசிசிஐ, இசிபி ஆகிய இரு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 7-ல் தொடங்கி ஜுலை 10 அன்று நிறைவுபெறுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12-ல் தொடங்கி ஜூலை 17 அன்று நிறைவுபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT