செய்திகள்

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்த நமீபியா

DIN

அபுதாபி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் நமீபியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. 

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் நெதர்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய நமீபியா 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்து வென்றது. 

இந்த ஆட்டத்தின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நமீபியா, சூப்பர் 12 சுற்று வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெதர்லாந்து அனைத்திலுமே தோல்வி கண்டுள்ளது.  முன்னதாக டாஸ் வென்ற நமீபியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பேட் செய்த நெதர்லாந்தில் தொடக்க வீரர் மேக்ஸ் ஓ'டெüட் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 70 ரன்கள் விளாசினார். 

உடன் வந்த ஸ்டீபன் மைபர்க் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சேர்த்தார். 

ரோலோஃப் வான் டெர் 6, காலின் ஆக்கர்மான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தார். ஓவர்கள் முடிவில் ஸ்காட் எட்வர்ட்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, லோகன் வான் பீக் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நமீபியா தரப்பில் ஜேன் ஃப்ரீலிங் 2, டேவிட் வீஸ் 1 விக்கெட் சாய்த்தனர். 

தொடர்ந்து ஆடிய நமீபியாவில் முதல் விக்கெட்டான ஸ்டீபன் பார்ட் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ஜேன் கிரீன் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு வீழ்ந்தார். கிரெய்க் வில்லியம்ஸ் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். கேப்டன் ஜெரார்ட் ஹெராஸ்மஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு அவுட்டானார். 

முடிவில் டேவிட் வீஸ் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 66, ஜேஜே ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினர். நெதர்லாந்து பெüலிங்கில் ஃபிரெட் கிளாசென், காலின் ஆகர்மான், டிம் வான் டெர், பீட்டர் சீலார் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT