செய்திகள்

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: முதலில் பிரான்ûஸ சந்திக்கும் இந்தியா

DIN

லெüசேன்: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 24-ஆம் தேதி பிரான்ஸை சந்திக்கிறது. 

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாளின் இதர ஆட்டங்களில் பெல்ஜியம் - தென் ஆப்பிரிக்கா, மலேசியா - சிலி, ஜெர்மனி - பாகிஸ்தான், கனடா - போலந்து அணிகள் மோதுகின்றன. 

உலகக் கோப்பை போட்டிக்கான குரூப் பிரிவுகளை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் புதன்கிழமை அறிவித்தது. அதில் இந்தியா, குரூப் "பி'-இல் கனடா, பிரான்ஸ், போலந்து அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப் "ஏ'-வில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் "சி'-யில் தென் கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்காவும், குரூப் "டி'-யில் ஆர்ஜென்டீனா, எகிப்து, ஜெர்மனி, பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

முதல் ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கும் இந்தியா, அடுத்து கனடாவை 25-ஆம் தேதியும், போலந்தை 27-ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் டிசம்பர் 3, இறுதி ஆட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியிலிருந்து விலகிய இங்கிலாந்துக்குப் பதிலாக போலந்து இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் 5 முதல் 16 வரை நடைபெற இருக்கும் ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான குரூப் பிரிவுகளையும் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டிருக்கிறது. அதில் இந்திய மகளிர் அணி குரூப் "சி'-யில் நடப்புச் சாம்பியனான ஆர்ஜென்டீனா, ஜப்பான், ரஷியாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. 

முதல் ஆட்டத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி ரஷியாவை சந்திக்கும் இந்தியா, பின்னர் 7-ஆம் தேதி ஆர்ஜென்டீனாவையும், 9-ஆம் தேதி ஜப்பானையும் எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT