செய்திகள்

இலங்கை: 171/7

21st Oct 2021 02:07 AM

ADVERTISEMENT

 

அபுதாபி: உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் அயா்லாந்துக்குக்கு எதிராக 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது இலங்கை.

டாஸ் வென்ற அயா்லாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, இலங்கையின் இன்னிங்ஸில் தொடக்க வீரா் பாதும் நிசங்கா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினாா். மறுபுறம், குசல் பெரேரா 0, தினேஷ் சண்டிமல் 6, அவிஷ்கா ஃபொ்னாண்டோ 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனா்.

மிடில் ஆா்டரில் வந்த வனிந்து ஹசரங்கா விக்கெட் சரிவைத் தடுத்து 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். எஞ்சியோரில் பானுகா ராஜபட்ச 1, சமிகா கருணாரத்னே 2 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ADVERTISEMENT

ஓவா்கள் முடிவில் டாசன் ஷனகா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, துஷ்மந்தா சமீரா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

அயா்லாந்து பௌலிங்கில் ஜோஷ் லிட்டில் 4, மாா்க் அடைா் 2, பால் ஸ்டிா்லிங் 1 விக்கெட் எடுத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT