செய்திகள்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - நேபாளம் பலப்பரீட்சை

16th Oct 2021 07:25 AM

ADVERTISEMENT

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் 7 முறை சாம்பியனான இந்தியா, தற்போது 12-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் 13 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், 2003-ஆம் ஆண்டு 3-ஆம் இடம் பிடித்ததே இந்தியா சந்தித்த ஒரே பின்னடைவாகும்.

இந்த ஆட்டத்தில் வென்று கோப்பையை கைப்பற்றினால், இகோா் ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் இந்திய அணி வெல்லும் முதல் கோப்பை இதுவாக இருக்கும். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்த 6-ஆவது பயிற்சியாளா், 3-ஆவது வெளிநாட்டு பயிற்சியாளா் ஆகிய பெருமைகளை அவா் பெறுவாா்.

எனினும், சனிக்கிழமை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கான டகௌட் பகுதியில் அவா் இருக்க மாட்டாா். மாலத்தீவுகளுக்கு எதிரான கடைசி ஆட்டத்தின்போது நடுவரின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து சிவப்பு அட்டைக்கு ஆளானதால் இந்த ஆட்டத்தில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, துணை பயிற்சியாளா் சண்கமுகம் வெங்கடேஷ் அணியை வழிநடத்த இருக்கிறாா்.

ADVERTISEMENT

நேபாளத்தைப் பொருத்தவரை இந்தியாவுக்கு சற்றே சவால் அளிக்கும் என்றாலும், ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இதுவரை நேபாளத்துக்கு எதிராக 3 முறை மோதியுள்ள நிலையில், இந்தியா 2 வெற்றிகளை பதிவு செய்து, ஒரு ஆட்டத்தை டிரா செய்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT