செய்திகள்

டெல்லி அணி பந்துவீச்சுத் தேர்வு: சென்னையில் ரெய்னா வெளியே, உத்தப்பா உள்ளே

4th Oct 2021 07:10 PM

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக ரெய்னாவுக்கு பதிலாக உத்தப்பாவும், சாம் கரண், ஆஷிஃப்க்கு பதிலாக மீண்டும் தீபக், பிராவோவும் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT