செய்திகள்

தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5: இவர்கள்தான் போட்டியாளர்களா?

3rd Oct 2021 10:48 PM

ADVERTISEMENT

பிக்பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்தார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, கானா பாடகி இசைவாணி, திரை விமர்சகர் அபிஷேக், சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய் வாடி, நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், ராப் பாடகி ஐக்கி பெரி, மாடல் அழகி அக்‌ஷரா ரெட்டி, நடிகர் நிரூப் நந்தகுமார், மாடல் அழகி நமீதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, மாடல் அழகி ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்குபெறுகின்றனர்.

அடுத்த 100 நாள்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT