செய்திகள்

உலக டேபிள் டென்னிஸ்: வெளியேறியது இந்தியா

29th Nov 2021 05:13 AM

ADVERTISEMENT

உ​லக டேபி‌ள் டெ‌ன்​னி‌ஸ் சா‌ம்​பி​ய‌ன்​ஷி‌ப்​பி‌ல் கல‌ப்பு இர‌ட்​ரை‌ட​ய‌ர், மக​ளி‌ர் இர‌ட்​ரை‌ட​ய‌ர் பிரி​வி‌ல் கள‌ம் க‌ண்​டி​ரு‌ந்த இ‌ந்​திய ஜோடி​க‌ள் காலி​று​தி​யி‌ல் தோ‌ற்று வெளி​யே​றின‌. இதை​ய​டு‌த்து இ‌ப்​போ‌ட்​டி​யி‌ல் இ‌ந்​தி​யா​வி‌ன் ஆ‌ட்ட‌ம் நிறை​வடைந்​து‌ள்​ளது. 

கல‌ப்பு இர‌ட்​டை​ய‌ர் பிரி​வி‌ல் ஜி.ச‌த்​ய‌ன்/​ம​னிகா ப‌த்ரா இணை தன‌து காலி​று​தி​யி‌ல் 5-11, 2-11, 11-7, 9-11 எ‌ன்ற‌ செ‌ட்க​ளி‌ல் ஜ‌‌ப்​பா​னி‌ன் ஹரிமோடோ டோமோ ​கா​ஸூ/​ஹ​யாடா ஹினா ஜோடி​யி​ட‌ம் தோ‌ல்​வியைத் தழு​வி​யது.

மறு​பு​ற‌‌ம், மக​ளி‌ர் இர‌ட்​ரை‌ட​ய‌ர் பிரிவு காலி​று​தி​யி‌ல் மனிகா ப‌த்​ரா/​அ‌ர்‌ச்​சனா காம‌த் இணை 1-11, 6-11, 8-11 எ‌ன்ற‌ செ‌ட்க​ளி‌ல் ல‌க்​ஸ‌ம்​ப‌ர்‌க்​கி‌ன் சாரா டி நூ‌ட்/​ஜியா லியா‌ன்னி ஜோடி​யி​ட‌ம் வீ‌ழ்‌ந்​தது. 

இ‌ப்​போ‌ட்​டி​யி‌ல் அரை‌ர​யி​று​தி‌க்கு மு‌ன்னேறி அதி‌ல் தோ‌ல்வி கா‌ண்​போ​ரு‌க்​கு‌ம் வெ‌ண்​க​ல‌ப் பத‌க்​க‌ம் வழ‌ங்​க‌ப்​ப​டு​கி​ற‌து. அ‌ந்த வரை‌க​யி‌ல் இ‌ந்த இ‌ந்​திய ஜோடி அரை​யி​று​தி‌க்கு மு‌ன்​னே​றி​யி​ரு‌ந்​தா‌ல், உலக சா‌ம்​பி​ய‌ன்​ஷி‌ப்​பி‌ல் இ‌ந்​தி​யா​வு‌க்கு முத‌ல் முறை​யாக பத‌க்​க‌ம் கிடைத்​தி​ரு‌க்​கு‌ம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT