செய்திகள்

பாரா பவ‌ர் லிஃ‌ப்​டி‌ங்: பத‌க்​க‌ம் வெ‌ன்று பர‌ம்​ஜீ‌த் சாதனை‌

29th Nov 2021 04:43 AM

ADVERTISEMENT

ஜார்ஜியாவில் நடைபெறும் உலக பாரா பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பரம்ஜீத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட பரம்ஜீத், மொத்தமாக 158 கிலோ பவர் லிஃப்டிங் செய்து 3-ஆம் இடம் பிடித்தார். அப்பிரிவில் ஜோர்டான் வீரர் ஒமர் எஸ்.ஹெச். கராதா (174 கிலோ) முதலிடமும், வியத்நாமின் வான் காங் லீ (170 கிலோ) 2-ஆம் இடமும் பிடித்தனர். இந்தப் பிரிவில் மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

பரம்ஜீத் குமார், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் பயிற்சி பெற்று வருபவர் ஆவார். பதக்கம் வென்ற பரம்ஜீத்துக்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியோர் தரப்பிலிருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோட்டியில் மகளிருக்கான 41 கிலோ பிரிவில் களம் கண்ட மன்பிரீத் கெüர், பதக்க வாய்ப்பை இழந்தார். எனினும், அவர் தனது தனிப்பட்ட பெஸ்ட்டாக 83 கிலோ பவர் லிஃப்டிங் செய்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT