செய்திகள்

நடுவர் நிதின் மேனனுடன் அஸ்வின் வாக்குவாதம்

DIN


நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவர் நிதின் மேனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பந்துவீசியவுடன் நடுவரின் பார்வையைப் பாதிக்கும் வகையில் அஸ்வினின் நகர்வு இருப்பது தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்டின் 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 77-வது ஓவரின் 4-வது பந்தை வீசி முடித்த அஸ்வின், பந்து கையிலிருந்து வெளியேறியதும் மறுதிசையை நோக்கி நகர்ந்தார்.

இதையடுத்து, அபாயகரமான பகுதிக்கு அஸ்வின் செல்வதால் தன்னால் பந்தைப் பின்பற்ற முடியவில்லை என நடுவர் நிதின் மேனன், அஸ்வினிடம் கூறியதாகத் தெரிகிறது.

இதன்பிறகு, களநடுவர்கள் நிதின் மேனன் மற்றும் விரேந்தர சர்மா ஆகியோர் கேப்டன் அஜின்க்யா ரஹானேவை அழைத்துப் பேசினர். இதில் அஸ்வினும் கலந்துகொண்டார். பின்னர், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் பேசும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

வர்ணனையாளர்கள் பின்னர் கூறுகையில், "இது நடுவரின் பார்வையைத் தடுப்பதைவிட பேட்ஸ்மேன்கள் 1 ரன் எடுப்பதைத் தடுப்பதாகும்" எனக் கூறினர்.

இதனால், ஆட்டத்தின் நடுவே லேசான சலசலப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT