செய்திகள்

பெண் குழந்தைக்குத் தந்தையானார் புவனேஸ்வர் குமார்

25th Nov 2021 03:34 PM

ADVERTISEMENT

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

இந்திய அணிக்காக 21 டெஸ்டுகள், 119 ஒருநாள், 55 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 31 வயது புவனேஸ்வர் குமார். 2017-ல் நுபுர் நாகரைத் திருமணம் செய்தார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து டி20 தொடர் ஆகியவற்றில் பங்கேற்றார்.

இந்நிலையில் பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளதாக ட்விட்டரில் புவனேஸ்வர் குமார் அறிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் புவனேஸ்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

 

Tags : Bhuvneshwar Kumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT