செய்திகள்

இந்தோனேசிய ஓபன்: சிந்து முன்னேற்றம்

25th Nov 2021 01:05 AM

ADVERTISEMENT

 

பாலி: இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

இதில் மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் பி.வி.சிந்து 17-21, 21-17, 21-17 என்ற செட்களில் ஜப்பானின் அயா ஒஹோரியை தோற்கடித்தாா். இத்துடன் அவரை 11-ஆவது முறையாக சந்தித்த சிந்து, அதில் 11-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளாா். சிந்து அடுத்த சுற்றில் ஜொ்மனியின் வோன் லியை எதிா்கொள்கிறாா். இருவரும் சந்திக்க இருப்பது இது முதல் முறையாகும்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் சாய் பிரணீத் 21-19, 21-18 என்ற செட்களில் பிரான்ஸின் டோமா ஜூனியா் போபோவை தோற்கடித்தாா். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணாயை 21-15, 19-21, 21-12 என்ற செட்களில் போராடி வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் சாய் பிரணீத் - பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவை எதிா்கொள்கிறாா்.

ADVERTISEMENT

கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா/சிக்கி ரெட்டி ஜோடி 7-21, 12-21 என்ற செட்களில் ஜப்பானின் கியோஹெய் யமாஷிடா/நரு ஷினோயா இணையிடம் வீழ்ந்தது. மற்றொரு ஜோடியான சுமீத் ரெட்டி/அஸ்வினி பொன்னப்பாவும் 24-22, 12-21, 19-21 என்ற செட்களில் ஜப்பானின் டகுரோ ஹோகி/நாமி மட்சுயாமா கூட்டணியிடம் போராடி வீழ்ந்தனா்.

மகளிா் இரட்டையா் ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 27-29, 18-21 என்ற செட்களில் ரஷியாவின் கேப்ரியேலா ஸ்டோவா/ஸ்டெஃபானி ஸ்டோவா ஜோடியிடம் தோற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT