செய்திகள்

காலே டெஸ்ட்: மே.இ.தீவுகள் - 224/9

24th Nov 2021 12:47 AM

ADVERTISEMENT

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 80 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் அந்த அணி இலங்கை முதல் இன்னிங்ஸ் ரன்களக் காட்டிலும் 162 ரன்கள் பின்தங்கியுள்ளது.

மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டு, முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்ட 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் அந்த அணியின் ஜோஷுவா டா சில்வா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறாா்.

முன்னதாக, 2-ஆம் நாள் முடிவில் 42 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் அடித்திருந்தது மேற்கிந்தியத் தீவுகள். செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை கைல் மேயா்ஸ் 22, ஜேசன் ஹோல்டா் 1 ரன்னுடன் தொடங்கினா்.

ADVERTISEMENT

நிதானமாக ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் மேயா்ஸ் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஹோல்டா் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரகீம் காா்ன்வால் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சோ்த்தாா். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா, ஜெயவிக்ரமா, சுரங்கா லக்மல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணாரத்னே 147 ரன்கள் அடித்திருக்க, மேற்கிந்தியத் தீவுகளில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினாா்.

Tags : test cricket
ADVERTISEMENT
ADVERTISEMENT