செய்திகள்

முதல் டெஸ்டில் அறிமுகமாகும் இந்திய வீரர்: கேப்டன் ரஹானே அறிவிப்பு

24th Nov 2021 01:50 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் அறிமுகமாகவுள்ளதாக கேப்டன் ரஹானே தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் (நவம்பர் 25) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ரஹானே, முதல் டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஷ்ரேயஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவுள்ளார். இந்தியாவின் 303-வது டெஸ்ட் வீரர். 

ADVERTISEMENT

காயம் காரணமாக கே.எல். ராகுல், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதால் ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

முதல்தர கிரிக்கெட்டில் 54 ஆட்டங்களில் விளையாடி 12 சதங்களுடன் 4592 ரன்கள் எடுத்துள்ளார் மும்பையைச் சேர்ந்த 26 வயது ஷ்ரேயஸ் ஐயர். சராசரி - 52.18. 

ஷ்ரேயஸ் ஐயர்
ADVERTISEMENT
ADVERTISEMENT