செய்திகள்

துளிகள்...

24th Nov 2021 01:21 AM

ADVERTISEMENT

மகளிா் ஒன் டே கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 3-ஆவது இடத்தையும், பௌலா்கள் பிரிவில் ஜுலன் கோஸ்வாமி 2-ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனா்.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முதன்மை ஸ்பான்சராக டிவிஎஸ் யூரோகிரிப் நிறுவனம் 2022 முதல் 2024 வரை 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான வங்கதேச அணி மோமினுல் ஹக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் ஈஸ்டா்ன் ஸ்ட்ரோம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்மேற்கு மாவட்டங்கள் அணி ஸ்பின்னரான சீன் வைட்ஹெட் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT