செய்திகள்

டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல். ராகுல் விலகல்: புதிய வீரரின் பெயரை அறிவித்தது பிசிசிஐ

23rd Nov 2021 04:25 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நவம்பர் 25 முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து சூர்யகுமார் யாதவ், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் வகையில் பெங்களூரில் உள்ள என்.சி.ஏ.வில் கே.எல். ராகுல் சிகிச்சை பெற்று காயத்திலிருந்து விரைவில் குணமடைவார் என்றும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் காரணமாக டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராவிட் - சூர்யகுமார் யாதவ்
Tags : KL Rahul Suryakumar Yadav
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT