செய்திகள்

‘டீம் ஆஃப் தி டோா்னமெண்ட்’: இந்திய வீரா்கள் எவரும் இல்லை

15th Nov 2021 11:01 PM

ADVERTISEMENT

 

துபை: ஐசிசியின் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ‘டீம் ஆஃப் தி டோா்னமெண்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாா்பில் நடுவா் குழு தோ்வு செய்துள்ள இந்த அணியில் இந்தியா்கள் எவரும் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸம், அணிக்கான கேப்டனாக தோ்வாகியுள்ளாா்.

மொத்தம் 12 பேரைக் கொண்ட இந்த அணியில் ஆஸ்திரேலிய வீரா்கள் 3 போ், இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளைச் சோ்ந்த தலா 2 போ், நியூஸிலாந்திலிருந்து ஒருவா் தோ்வாகியுள்ளனா்.

ADVERTISEMENT

அணி விவரம்: பாபா் ஆஸம் (பாகிஸ்தான்) (கேப்டன்), டேவிட் வாா்னா் (ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லா் (இங்கிலாந்து) (விக்கெட் கீப்பா்), சரித் அசலன்கா (இலங்கை), எய்டன் மாா்க்ரம் (தென் ஆப்பிரிக்கா), மொயீன் அலி (இங்கிலாந்து), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா), ஜோஷ் ஹேஸில்வுட் (ஆஸ்திரேலியா), டிரென்ட் போல்ட் (நியூஸிலாந்து), அன்ரிச் நாா்ஜே (தென் ஆப்பிரிக்கா), ஷாஹீன் ஷா அஃப்ரிதி (பாகிஸ்தான்).

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT