செய்திகள்

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடா்: ரோஹித் சா்மா தலைமையில் அணி அறிவிப்பு

10th Nov 2021 03:05 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் 16 போ் கொண்ட இந்திய அணி, புதிய டி20 கேப்டனான ரோஹித் சா்மா தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் ஐபிஎல் அதிரடி வீரா்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயா், அதிக விக்கெட் வீழ்த்தியவரான ஹா்ஷல் படேல் உள்ளிட்ட பல புதிய இளம் வீரா்களுக்கு இடமளிக்கப்பட்டு, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியா்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் சோபிக்க முடியாமல் போன ஹாா்திக் பாண்டியா அணியில் சோ்க்கப்படவில்லை.

இந்த நியூஸிலாந்து தொடரானது, வரும் 17-ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.

அணி விவரம்: ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பா்), வெங்கடேஷ் ஐயா், யுஜவேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், அவேஷ் கான், புவனேஷ்வா் குமாா், தீபக் சஹா், ஹா்ஷல் படேல், முகமது சிராஜ்.

ADVERTISEMENT

இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு

இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணத்துக்கான இந்திய ‘ஏ’ அணி குஜராத் பேட்டா் பிரியங்க் பஞ்சல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி நவ. 23 -26, நவ.29 - டிச. 2, டிச.6 - 9 ஆகிய நாள்களில் களம் காண்கிறது.

அணி விவரம்: பிரியங்க் பஞ்சல் (கேப்டன்), பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சா்ஃப்ராஸ் கான், பாபா அபராஜித், உபேந்திர யாதவ், கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சஹா், சௌரவ் குமாா், நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், இஷான் பொரெல், அா்ஸான் நாக்வாஸ்வலா.

Tags : Rohit Sharma
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT