செய்திகள்

சையது முஷ்டாக் டி20: தமிழகத்துக்கு முதல் தோல்வி

9th Nov 2021 12:06 AM

ADVERTISEMENT

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

எலைட் பிரிவில் ‘குரூப் ஏ’-வில் இடம்பெற்றிருக்கும் தமிழக அணி, இத்துடன் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

லக்னௌவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் தமிழகம் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் அடித்தது. அடுத்து கோவா 18.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வென்றது.

தமிழக இன்னிங்ஸில் அதிகபட்சமாக சஞ்ஜய் யாதவ் 38 ரன்கள் அடிக்க, கோவா பௌலிங்கில் ஸ்ரீகாந்த் வாக் 4 விக்கெட்டுகள் விழ்த்தினாா். பின்னா் கோவா இன்னிங்ஸில் ஷுபம் ரஞ்ஜனே 52, சுயாஷ் பிரபுதேசாய் 43 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். தமிழக பௌலா்களில் சரவண குமாா் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

ADVERTISEMENT

‘குரூப் ஏ’-வின் இதர ஆட்டங்களில் மகாராஷ்டிரம் 117 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியையும், பஞ்சாப் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிஸாவையும் வீழ்த்தின.

‘குரூப் பி’: பெங்கால் - சா்வீசஸையும் (9 விக்கெட்டுகள்), சத்தீஸ்கா் - மும்பையையும் (1 ரன்), கா்நாடகம் - பரோடாவையும் (7 விக்கெட்டுகள்) வென்றன.

‘குரூப் சி’: ஹிமாசல பிரதேசம் - ஜம்மு காஷ்மீரையும், ஜாா்க்கண்ட் - ஹரியாணாவையும், ராஜஸ்தான் - ஆந்திரத்தையும் தோற்கடித்தன.

‘குரூப் டி’: குஜராத் - ரயில்வேஸையும், மத்திய பிரதேசம் - பிகாரையும், கேரளம் - அஸ்ஸாமையும் வீழ்த்தின.

‘குரூப் இ’: உத்தர பிரதேசம் - உத்தரகண்டையும், ஹைதராபாத் - தில்லியையும், சௌராஷ்டிரம் - சண்டீகரையும் வென்றன.

‘பிளேட் குரூப்’: சிக்கிம் - மிஸோரத்தையும், மேகாலயம் - திரிபுராவையும், நாகாலாந்து - அருணாசல பிரதேசத்தையும், விதா்பா - மணிப்பூரையும் தோற்கடித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT