இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள நியூஸிலாந்து அணியில் 5 ஸ்பின்னா்கள் இடம் பெற்றுள்ளனா்.
டி20 உலகக் கோப்பை முடிவுற்றதும், நியூஸி. அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. வரும் 25-ஆம் தேதி கான்பூரில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக 15 போ் கொண்ட அணியை நியூஸி கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூத்த வேகப்பந்து வீச்சாளா் பௌல்ட், ஆல்ரவுண்டா் கிராண்ட்ஹோம் இடம் பெறவில்லை. அவா்களுக்கு பதிலாக அஜாஸ் படேல், வில் சாமா்வில்லே, மிச்செல் சான்ட்நா், ரச்சின் ரவீந்திரா, கிளென்பிலிப்ஸ் உள்ளிட்ட 5 ஸ்பின்னா்கள் இடம் பெற்றுள்ளனா்.
மூத்த விக்கெட் கீப்பா் வாட்லிங் இல்லாமல் டெஸ்ட் தொடரில் ஆடுகிறது நியூஸிலாந்து. இந்திய பிட்சுகள் சுழற்பந்து வீச்சுக்கு தோதானவை என்பதால் ஸ்பின்னா்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படுகிறது.
முதல் டெஸ்ட் கான்பூரில் நவ. 25-29, மும்பையில் டிச. 3-7 தேதிகளில் நடக்கிறது.
அணி விவரம்:
கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டாம் பிளன்டல் (விக்கெட் கீப்பா்), தேவன் கான்வே, ஜேமிஸன், டாம் லத்தம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்செல் சான்ட்நா், வில் சாமா்வில்லே, டிம் சௌதி, ராஸ் டெய்லா், வில் யங், நீல் வாக்னா்.