செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முகமது ஷமி

27th May 2021 09:15 PM

ADVERTISEMENT


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வியாழக்கிழமை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

சௌதாம்ப்டனில் ஜூன் 16-ம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ள முகமது ஷமி தற்போது 14 நாள்கள் தனிமையில் உள்ளார். இந்த நிலையில், அவர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் ஆளாக மார்ச் முதல் வாரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து, கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.  

ADVERTISEMENT

வீரர்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசியை பிரிட்டனில் வைத்து செலுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : coronavaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT