செய்திகள்

ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டதால் மனம் உடைந்து போனேன்: கம்மின்ஸ்

27th May 2021 11:01 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் மனம் உடைந்து போனேன் என கேகேஆர் அணி வீரர் பேட் கம்மின்ஸ் கூறினார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஐபிஎல் போட்டி பற்றி கேகேஆர் அணி வீரரான பேட் கம்மின்ஸ் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் மனம் உடைந்து போனேன். அப்போதுதான் நாங்கள் நன்றாக விளையாடி வந்தோம். 2-ம் பாதி எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. எந்தளவுக்குச் சிறந்த அணி என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். என்னுடைய பந்துவீச்சு சரியாக அமையவில்லை. அது எனக்கு வேதனையைத் தந்தது. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் கடினமாக் இருந்தது. ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்று இருந்தபோதும் கடுமையாகப் போராடினோம். ஐபிஎல் போட்டியால் வீரர்களிடையே நட்புணர்வு ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம். உதவி கேட்டால் யாரும் மறுப்பதில்லை. கடந்த 10 வருடங்களில் ஐபிஎல் போட்டியால் இந்த மகத்தான விஷயம் நடந்துள்ளது என்றார்.

Tags : Cummins IPL heartbreaking
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT