செய்திகள்

சிபிஎல் டி20 போட்டி: செயின்ட் கிட்ஸ் அணிக்கு மீண்டும் தேர்வானார் கிறிஸ் கெயில்

27th May 2021 05:53 PM

ADVERTISEMENT

 

சிபிஎல் டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில்.

கடந்த வருட சிபிஎல் போட்டியில் கிறிஸ் கெயில் பங்கேற்கவில்லை. 

சிபிஎல் போட்டியில் கெயிலைத் தக்கவைக்க ஜமைக்கா அணி விரும்பாததால் செயிண்ட் லுசியா அணிக்குக் கடந்த வருடம் மாறினார் கெயில். சிபிஎல் போட்டியில் முதல் நான்கு சீஸனில் ஜமைக்கா அணிக்காக கெயில் விளையாடினார். அடுத்த இரு வருடங்களுக்கு செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் விளையாடிய கெயில் 2019-ல் ஜமைக்கா அணிக்கு மீண்டும் வந்தார். ஆனால் 2019-ல் 10 சிபிஎல் ஆட்டங்களில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார் கெயில். ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. செயிண்ட் லுசியா அணிக்குத் தேர்வான கெயில், சொந்தக் காரணங்களுக்காக 2020 சிபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த வருட சிபிஎல் போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 19 வரை வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து 33 ஆட்டங்களும் ஒரே மைதானத்தில் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுவதாக கெயில் முடிவெடுத்துள்ளார். இதையடுத்து செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு அவர் மீண்டும் தேர்வாகியுள்ளார். 

Tags : CPL Chris Gayle கிறிஸ் கெயி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT