செய்திகள்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இன்று அறுவை சிகிச்சை

21st May 2021 10:28 AM

ADVERTISEMENT

 

முழங்கை காயத்துக்காக இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.  

இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் ஜூன் 2 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். 

ADVERTISEMENT

இந்நிலையில் முழங்கை காயத்துக்காக இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார் ஆர்ச்சர். கடந்த புதன் அன்று மருத்துவ நிபுணர்களை ஆர்ச்சர் சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆர்ச்சர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT