செய்திகள்

தடகள முன்னாள் வீரர் மில்கா சிங்குக்கு கரோனா பாதிப்பு

21st May 2021 02:49 PM

ADVERTISEMENT

 

தடகள முன்னாள் வீரர் மில்கா சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீ. ஓட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் 4-ம் இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். 400 மீ. ஓட்டத்தில் குறைந்த நேரத்தில் ஓடி முடிந்த அவருடைய தேசிய சாதனை 38 வருடங்களுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. 1959-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் மில்கா சிங், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

எங்களுடைய பணியாளர்கள் சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் கரோனா பரிசோதனையை மேற்கொண்டோம். எனக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது, எனக்குக் காய்ச்சலோ இருமலோ இல்லை. மூன்று நாள்களில் நான் சரியாகி விடுவேன் என மருத்துவர் கூறியுள்ளார் என்று 91 வயது மில்கா சிங் பேட்டியளித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT