செய்திகள்

அந்த ஒரு வாய்ப்புக்காகக் காத்திருப்பேன்: விக்கெட் கீப்பர் சஹா

21st May 2021 05:33 PM

ADVERTISEMENT

 

இந்திய அணியில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் தான் விக்கெட் கீப்பராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சஹா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார். இரு தொடர்களையும் இந்திய அணி வெல்ல அவருடைய பங்களிப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இதனால் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தான் முதல் தேர்வாக உள்ளார். இதற்கடுத்த நிலையில்தான் சஹா உள்ளார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் சஹா கூறியதாவது:

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி சில ஆட்டங்களில் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடியுள்ளார். அதனால் இங்கிலாந்தில் விக்கெட் கீப்பராக அவர் தான் முதல் தேர்வாக இருக்கவேண்டும். நான் காத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது என்னுடைய திறமையை நிரூபிப்பேன். அந்த ஒரு வாய்ப்புக்காகத் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்வேன். 

கே.எஸ். பரத், மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது எனக்கு கரோனா பாதிப்பு இல்லை. அப்போதும் மாற்று வீரராக பரத் அணியில் இருந்தார். இப்போது எனக்கு கரோனா பாதிப்பு வந்ததால் அவரை மாற்று வீரர் எனச் சொல்கிறார்கள். கரோனா சூழல் காரணமாக பரத்தை 3-வது விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்துள்ளார்கள் என நினைக்கிறேன் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT