செய்திகள்

சுவாரசியமாக மாறியிருக்கும் டெஸ்ட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைப் பாராட்டும் நியூசி. கேப்டன்

18th May 2021 02:39 PM

ADVERTISEMENT

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் சுவாரசியமாக மாறியுள்ளது என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. 

இதுபற்றி நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:

ADVERTISEMENT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் சுவாரசியமாக மாறியுள்ளது. டிக்ளேர் செய்வதிலும் டெஸ்ட் ஆட்டங்கள் பரபரப்பாக முடிவதிலும் இதைக் காண்கிறோம். இந்தியா - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்களும் சுவாரசியமாக இருந்தன. கடும் முயற்சி செய்து வெற்றி பெற அணிகள் முயல்கின்றன. இந்தியாவுக்கு எதிராக எப்போது விளையாடினாலும் அது சவாலாக அமையும் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT