செய்திகள்

ஐபிஎல்: மாலத்தீவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஆஸி. வீரர்கள்!

DIN

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் அனைவரும் மாலத்தீவிலிருந்து சொந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ஆஸ்திரேலிய அரசு இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை விதித்திருந்தது. அதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அந்நாட்டு வீரா்கள் மாலத்தீவுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஐபிஎல் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடர், கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார். ஸ்லேடர் வழியைப் பின்பற்றி ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 38 பேரும் தில்லியில் கூடி, அங்கிருந்து அவா்கள் தனி விமானத்தில் மாலத்தீவுகள் சென்றார்கள். 

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடைக்காலம் ஆஸ்திரேலியாவில் மே 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் வீரா்கள், பயிற்சியாளா்கள், வர்ணனையாளர்கள் உள்பட 38 போ் கொண்ட ஆஸ்திரேலிய குழு மாலத்தீவுகளில் இருந்து சொந்த நாட்டுக்கு இன்று காலை திரும்பியுள்ளது. 

பிசிசிஐ ஏற்பாடு செய்த தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குச் சென்ற ஆஸி. குழுவினர் அனைவரும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT