செய்திகள்

கரோனா நிவாரணம்: ரூ. 11 கோடி நிதி திரட்டிய விராட் கோலி

14th May 2021 01:17 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 11.39 கோடி நிதி திரட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.

இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஒரேநாளில் 4,120 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவெடுத்தார்கள். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கினார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் ரூ. 11 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளார் விராட் கோலி. இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஒருமுறை அல்ல இருமுறை எங்கள் இலக்கை நாங்கள் தாண்டிவிட்டோம். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நிதியுதவி அளித்தவர்களுக்கும் இத்தகவலைப் பகிர்ந்தவர்களுக்கும் என அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ. 11.39 கோடி நிதியை கேட்டோ அமைப்பின் வழியாக விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திரட்டியுள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT