செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி

10th May 2021 02:31 PM

ADVERTISEMENT

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தில்லியில் சனிக்கிழமை மட்டும் 1.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தில்லியில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இதுகுறித்த தகவலை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருக்கவும் என அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

கரோனா தடுப்புப் பணிகளுக்காக விராட் கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்தார்கள். 

Tags : Covid vaccine Virat Kohli
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT