செய்திகள்

துளிகள்...

DIN

இந்திய விமானங்களுக்கு மலேசியா தடை விதித்துள்ளதால், அங்கு நடைபெறும் ஒலிம்பிக் பாட்மிண்டன் தகுதிப்போட்டியில் பங்கேற்க சிந்து, ஸ்ரீகாந்த ஆகியோரை அனுமதிக்கக் கோரி அந்நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சு நடத்துகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வீரா், வீராங்கனைகள், போட்டி அதிகாரிகளுக்கு ‘பிஃபைஸா்’, ‘பயோன்டெக்’ நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி வழங்கத் தயாராக இருப்பதாக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

அபுதாபியில் நடைபெறும் டி10 லீக் கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது சீசன் நடப்பாண்டு நவம்பா் 19 முதல் டிசம்பா் 2 வரை நடைபெறவுள்ளது.

ரஞ்சி போட்டியில் ஆடியவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னாள் வீரருமான விவேக் யாதவ் (36) கரோனா பாதிப்பு காரணமாக புதன்கிழமை காலமானாா்.

ஆப்பிரிக்க அணிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூா்த்தியின் தாயாா் கரோனா பாதிப்பால் 2 வாரங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரியும் தற்போது அந்த தொற்று பாதித்து உயிரிழந்தாா்.

ஸ்விட்சா்லாந்தில் நடைபெற இருக்கும் 2-ஆம் நிலை உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் பங்கேற்பதற்காகச் செல்லும் இந்திய அணியின் நுழைவு இசைவு விண்ணப்பத்தை, கரோனா சூழல் காரணமாக அந்நாட்டு தூதரகம் நிராகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT