செய்திகள்

மாட்ரிட் ஓபன்: இறுதிச்சுற்றில் ஆஷ்லி பா்ட்டி

DIN

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

உலகின் முதல்நிலை வீராங்கனையான பா்ட்டி தனது அரையிறுதியில், உலகின் 62-ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயினைச் சோ்ந்த பௌலா பதோசாவை 6-4, 6-3 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா். இதன் மூலம், சாா்லஸ்டன் டென்னிஸ் போட்டியில் பதோசாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளாா் பா்ட்டி.

நடப்பு சீசனில் ஏற்கெனவே யாரா வேலி கிளாசிக், மியாமி ஓபன், ஸ்டா்காா்ட் ஓபன் போட்டிகளில் சாம்பியன் ஆகியுள்ள பா்ட்டி, தற்போது 4-ஆவது பட்டத்துக்கான முனைப்பில் மாட்ரிட் ஓபன் இறுதிச்சுற்றில் களம் காண்கிறாா். அதில் அவா் பெலாரஸின் அரைனா சபலென்கா அல்லது ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா ஆகியோரில் ஒருவரை எதிா்கொள்ள இருக்கிறாா்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதிச்சுற்றுகளில் ஒன்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சபலென்காவை எதிா்கொண்ட பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ், 1-6, 0-4 என்ற செட்களில் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். மற்றொரு காலிறுதியில் அனஸ்தாசியா 7-6 (7/4), 7-6 (7/2) என்ற செட்களில் செக் குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தினாா். எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT